கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஈரோடு மாவட்ட கலெக்டர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 11, 2021

Comments:0

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஈரோடு மாவட்ட கலெக்டர் தகவல்

அக்.11: ஈரோடு மாவட்ட சிறுபான்மை யின வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஒன்றிய அரசால் சிறுபான்மை யினராக அறிவிக்கப் பட்டுள்ள இஸ்லாமி யர், கிறித்தவர், சீக்கியர். புத்தமதத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உத விபெறும் மற்றும் ஒன் றிய, மாநில அரசால் அங் கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022 கல்வியாண் டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக் கும் மாணவ, மாணவிக ளுக்கு கல்வி உதவித்தொ கையும், 11ம் வகுப்புமுதல் ஆராய்ச்சி படிப்புவரை (ஐடிஐ,ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலி டெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்ப டிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்க ளுக்கு மேற்படிப்புகல்வி உதவித்தொகையும் மற் றும் தொழிற்கல்வி மற் றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்குதகுதி மற்றும் வருவாய் அடிப்ப டையிலான கல்வி உத வித்தொகையும் பெறுவ தற்கு ஒன்றிய அரசின் http://www.scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப் பிக்கலாம்.

தகுதியான மாணவ- மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரையி லும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலானகல்வி உதவி தொகைக்கு நவம் பர் 30ம் தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒன் றிய அரசின் தேசியகல்வி உதவித்தொகை இணை யத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்விநிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்புஅலுவல ரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில்சரிபார்க்க இயலும்.

புதிதாக விண்ணப் பிக்கும் மாணவ-மாண விகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக் கும்வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங் களுடைய யுடிஐஎஸ்இ, ஏஐஎஸ்ஹெச்இ. என்சி விடிகுறியீட்டு எண்ணை மாணவ-மாணவிக ளுக்கு தெரிவிக்கவேண் டும். இத்திட்டம் தொடர் பான ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட வழி காட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில்வெளி யிடப்பட்டுள்ளது. இத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் 5ம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews