பசுக்களை கட்டணமாக பெற்ற கல்லூரிக்கு வங்கி நிர்வாகம் சீல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 31, 2021

Comments:0

பசுக்களை கட்டணமாக பெற்ற கல்லூரிக்கு வங்கி நிர்வாகம் சீல்

பாட்னா-பீஹாரில் கட்டணத்துக்கு பதிலாக மாணவர்களிடமிருந்து பசுக்களை பெற்றதால் பிரபலமான பொறியியல் கல்லுாரி, வங்கி கடனை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து அந்த கல்லுாரிக்கு வங்கி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பக்சர் மாவட்டம் அரியான் கிராமத்தில் 'வித்யாதான் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கல்வி மையம்' 2010ல் துவக்கப்பட்டது. கேள்விக்குறிராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் விஞ்ஞானிகள் எஸ்.கே.சிங், அருண் குமார் வர்மா போன்றவர்கள் இந்த கல்லுாரியை துவக்கினர்.

இந்த கல்லுாரி நிர்வாகம் 'பொறியியல் படிப்பிற்கான 72 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்த முடியாதோர், அதற்கு பதிலாக ஐந்து பசுக்களை வழங்கலாம்' என, அறிவித்தது. இதையடுத்து பல மாணவர்கள், கட்டணத்துக்கு பதிலாக பசுக்களை வழங்கி இந்த கல்லுாரியில் சேர்ந்தனர். தற்போது இந்த கல்லுாரி வங்கிக் கடன் 5.90 கோடி ரூபாய் செலுத்த தவறியதால் 'சீல்' வைக்கப் பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து கல்லுாரி நிறுவனர் எஸ்.கே.சிங் கூறியதாவது:டாக்டர்கள், பொறியாளர்கள் போன்றோரால் துவக்கப்பட்ட இந்த கல்லுாரிக்கு பேங்க் ஆப் இந்தியா, 4.65 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இதற்காக 15 கோடி ரூபாய்க்கு சொத்து உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் 10 கோடி ரூபாய் கடன் அளிக்க வங்கி ஒப்புதல் அளித்தது. கடந்த 2012 வரை மாத தவணையை ஒழுங்காக செலுத்தி வந்தோம். அதன் பின் செலுத்தவில்லை. இதனால் வங்கி நிர்வாகம் கல்லுாரிக்கு 'சீல்' வைத்து விட்டது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார் .

'கல்லுாரி நிர்வாகம் முதலில் வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்த தவறியதால், இரண்டாம் கட்ட கடனை தராமல் நிறுத்தி வைத்தோம்' என, பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிஇதுவரை இந்த கல்லுாரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

அவர்களில் 20 பேர் பசுக்களை கட்டணமாக கொடுத்தவர்கள். இந்த கல்லுாரியில் படித்த விஜேந்திரா மிஸ்ரா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிகிறார்.''பசுக்களை கட்டணமாக ஏற்றதால் தான் சாதாரண விவசாயியான என் பெற்றோரால் என்னை பொறியியல் கல்லுாரியில் படிக்க வைக்க முடிந்தது,'' என, விஜேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews