தீபாவளியை முன்னிட்டு, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி நாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு 21,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 2020-2021ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,87,250 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்தநிலையில், சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போன்ஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، أكتوبر 25، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.