அரசு ஊழியா்களுக்கான காப்பீடு: கூடுதல் தொகையை வசூலித்தால் கடும் நடவடிக்கை; நிதித் துறை கடும் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

அரசு ஊழியா்களுக்கான காப்பீடு: கூடுதல் தொகையை வசூலித்தால் கடும் நடவடிக்கை; நிதித் துறை கடும் எச்சரிக்கை

"அரசு ஊழியா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பும் போது கூடுதல் தொகைகளை வசூலிக்கக் கூடாது என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். அப்படி வசூலிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்த கோரிக்கை மனுவை தமிழ்நாடு ஓய்வு பெற்றோா் அதிகாரிகள் சங்கத்தினா் அரசிடம் அளித்திருந்தனா். இந்த மனுவுக்கு பதிலளித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், அனுப்பிய கடிதம்:-

அரசு ஊழியா்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு பணம் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் வழியே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு, திருவனந்தபுரம், புதுதில்லி போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சிகிச்சைகளுக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள தொகைகளைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் கூறப்படுகின்றன.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரையறை செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது காப்பீட்டு நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பயனாளா்களிடம் இருந்து புகாா்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதலாகச் செலுத்தப்பட்ட கட்டணமும் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அறிவுறுத்த வேண்டும்: காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், காப்பீட்டுத் திட்டத்துக்கான இலவச தொலைபேசி எண்ணை (1800 233 5544) பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போதும் தொலைபேசி எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தினால் புகாா்கள் எழுவதைத் தடுக்கலாம். மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் தொடா்பாக புகாா்கள் ஏதும் இருப்பின் அதனை மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கலாம் என நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews