தலைமைஆசிரியர் தவிக்கும் 50 அரசு பள்ளிகள் - பொது மாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 15, 2021

Comments:0

தலைமைஆசிரியர் தவிக்கும் 50 அரசு பள்ளிகள் - பொது மாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் எப்போது?

அரசுப்பள்ளிகளில் ஆண்டுதோறும் உரு வாகும் காலிப்பணியி டங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

ஆனால், கடந்த கல்வி ஆண்டில் கரோனா தொற்று முழு ஊரடங்கு காரணமாக கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இத னால், அரசுப்பள்ளிகளில் தலைமைஆசிரியர், முது கலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட நிலை களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்ப டாமலேயே உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் 700 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்பணியிடங்கள், 300 உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அதோடு, தகுதி யுள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது.

வேலுார் மாவட்டத்தை பொறுத்தவரை கணியம் பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, கம் மவான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பிரம் மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 12 மேல் நிலைப்பள்ளிக ளின் தலைமைஆசிரியர் பணி யிடங்கள் காலியாகவே உள்ளது. மேல் அரசம் பட்டு, வேலுார் கஸ்பா ஆகிய 2 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே உள்ளது.

இதுபோன்று, ஒருங்கி ணைந்த வேலுார் மாவட் டம் முழுவதும் 50க்கும் அதிகமான தலைமை ஆசி ரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளது. இதன்காரண மாக,மேற்குறிப்பிட்ட பள்ளி களின் செயல் திறன் மற் றும் நிர்வாகத்திறன் எல் லாம் முடங்கியே உள்ளது. இந்நிலையில், 1ம் வகு ப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும், நவ. 1ம் தேதி முதல் பள்ளிக ளில் நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலை யில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள தலைமைஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது அவசியமாக உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews