தமிழ் வழி கல்விச்சான்று வழங்க மாணவனிடம் ₹.100 லஞ்சம் கேட்கும் அரசு பள்ளி தலைமையாசிரியர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 11، 2021

1 Comments

தமிழ் வழி கல்விச்சான்று வழங்க மாணவனிடம் ₹.100 லஞ்சம் கேட்கும் அரசு பள்ளி தலைமையாசிரியர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கும்மிடிப்பூண்டி, அக்.11: தமிழ் வழியில் கல்விச் சான்று வழங்கமாணவனி டம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் (100 லஞ்சம் கேட் கும் வீடியோ சமூக வலைத் ளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் தலை யாரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எளாவூர், சுண்ணாம்பு குளம், மெதிபாளையம், பெரிய ஓபுளாபுரம், கும் புளி, ஏடூர், கண்ணம்பாக் கம்,நரசிங்கபுரம், மேலக்க ழனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராககும் மிடிப்பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்க டேசன்(54) என்பவர் சில மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப்குழுக்க ளில் தலையாரிபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசி ரியர் வெங்கடேசன் மற்றும் ஒரு மாணவர் இருவருக்கி டையே பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்க ளில் வைரலாக பரவி வரு கிறது. அதில் தலைமையாசிரியர் வெங்கடேசனிடம் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் டிஎன்பிசி தேர்வில் வெற் றிபெற தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தலைமையாசி ரியர் வெங்கடேசன் 100 லஞ்சம் கேட்பது பதிவா கியுள்ளது. மேலும், மாண வன், கொண்டு வந்த படி வத்தில் தமிழ் வழி கல்விச் சான்றிதழ் கொடுக்குமாறு வலியுறுத்தியும், தலைமை யாசிரியர் தன்னுடைய பள்ளியில் உள்ள சான்றி தழை தான் தர முடியும் மற்ற சான்றிதழை தரமு டியாது என கூறியதும் வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

هناك تعليق واحد:

  1. சம்மந்தப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தி உண்மை எனில் தலைமை ஆசிரியரை கட்டாயமாக ஓய்வுஅளிக்கக வேண்டும்.தயவு தாட்சனியம் வழங்கல் கூடாதூ.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة