மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தேர்வு எழுத உள்ளவர்கள் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவர். இதற்கு சில மையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பணம் கட்டி போட்டித் தேர்வுக்கு தயாராவது சற்று கடினமாக உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைவரும் அரசு பணி பெற வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். அதனால் இனி வரும் காலங்களில் போட்டித்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சார்பில் இருந்து அந்தந்த மாவட்ட பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலகளில் உரிய பயிற்றுநர் மூலம் குரூப் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அங்கு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களின் நூலகமும் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. போட்டித் தேர்வு எழுத உள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.