தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 16.09.2021 - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، سبتمبر 16، 2021

Comments:0

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 16.09.2021 - PDF

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,658-ல் இருந்து 1,693ஆக சற்று அதிகரித்துள்ளது. 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,548 பேர் குணமடைந்து உள்ளனர்.


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,721 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,693 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,40,361 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,48,31,541மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கோவிட் உறுதியானவர்களில் 936 பேர் ஆண்கள், 757 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,41,394 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,98,929ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,548 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,88,334 ஆக உயர்ந்துள்ளது.


25 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 17பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,271ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்த நிலையில் இன்று (16ம் தேதி) 202 ஆக குறைந்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة