IIT, IIM, NIT உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:737; நாள்:17.09.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، سبتمبر 17، 2021

Comments:0

IIT, IIM, NIT உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:737; நாள்:17.09.2021

செய்தி வெளியீடு எண்:737
நாள்:17.09.2021
பத்திரிகைச் செய்தி

"மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம். ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை (Fresh Applications) விண்ணப்பித்தல்"


தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி. ஐஐஎம். ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமாணம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22ம் கல்வியாண்டில் புதியதாக (Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை நேரில் அணுகியோ அல்லது கீழ்க்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பக்கோரி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும் மேற்படி 2021-22ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இயக்குநர்.


பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம். எழிலகம் இணைப்பு கட்டடம்.


2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.


தொலைபேசி எண். 044-28551462


மின்னஞ்சல் முகவரி. tngovtiltscholarshp@gmail.com


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة