பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டதில் குளறுபடி ? அரசு பள்ளி மாணவனின் வேதனை பதிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، سبتمبر 15، 2021

Comments:0

பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டதில் குளறுபடி ? அரசு பள்ளி மாணவனின் வேதனை பதிவு!

என் பெயர் சதீஷ்குமார் நான் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள சில்லாரஅள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன்.. ஏழைக்குடும்பத்தை சார்ந்தவன்.


1. அரசு உயர்நிலைப் பள்ளி, சில்லார அள்ளியில் 6, 7, 8ம் வகுப்பு வரையும்,


2. அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தமேட்டில் 9, 10 ஆம் வகுப்பினையும்


3. அரசு மேல்நிலைப் பள்ளி, ஜாலிபுதூரில் 11,12 ஆம் வகுப்பினையும் படித்து முடித்தேன்..


Name: M.Sathish Kumar


Application Number:348102


General Rank:122416


Community Rank:61527


Random Number:9189046047
எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக எனக்கு பொறியியல் படிக்க ஆசை..தற்போது இந்த ஆண்டு பொறியியல் படிப்பதற்காக கலந்தாய்விற்காக முறையாக விண்ணப்பித்து இருந்தேன்..இன்று (14.09.2021) பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது அந்த தரவரிசை பட்டியலில் எனது பெயர் அரசு பள்ளியில் படித்த மாணவன் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது... இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நமது தமிழகஅரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.. எனவே தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்து எனக்கு பாதிப்பு ஏற்படாமல் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة