பி.ஐ.எஸ்.பி., உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 17, 2021

Comments:0

பி.ஐ.எஸ்.பி., உதவித்தொகை

தாய்லாந்தில் உள்ள தி ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அண்ட் டிசைன், கிங் மாங்குட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கட்டடக்கலை சார்ந்த படிப்பை மேற்கொள்ள சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. பிரசிடென்சியல் இன்டர்நேஷனல் ஸ்காலர்ஷிப் புரொகிராம் - பி.ஐ.எஸ்.பி.,:


ஆர்கிடெக்சர் மற்றும் டிசைன் சார்ந்த படிப்புகளை சிறந்த முறையில் வழங்குவதையும், கலை மற்றும் வடிவமைப்பில் தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படும் இப்பல்கலைக்கழகம், ஆர்கிடெக்சர் மற்றும் டிசைன் துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யும் சர்வதேச மாணவர்களுக்கு ’பிரசிடென்சியல் இன்டர்நேஷனல் ஸ்காலர்ஷிப் புரொகிராம்’ எனும் உதவித்தொகை திட்டத்தை 2023ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.


அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இளநிலை பட்டப்படிப்புகளில் 20 மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்புகளில் 5 மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


துறைகள்:* ஆர்கிடெக்சர்* இன்டீரியர் ஆர்கிடெக்சர்* லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்* டிசைன் இன்னோவேஷன்* கம்யூனிகேஷன் டிசைன் தகுதிகள்:* தாய்லாந்தை சேர்ந்த மாணவராக இருக்கக்கூடாது. வெளிநாடுகளை சேர்ந்த மாணவராக இருக்கவேண்டும்.* போதிய ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும். ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 5 மதிப்பெண்களுக்கு குறையாமலும் அல்லது டோபல் தேர்வில் 61 மதிப்பெண்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.* பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட துறையால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.


உதவித்தொகை விபரம்:கல்விக்கட்டணம் 90 அமெரிக்க டாலர், செமஸ்டர் கட்டணம் 750 அமெரிக்க டாலர் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு மட்டும் சிறப்பு கட்டணம் 1,102 அமெரிக்க டாலர் ஆகியவை தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


குறிப்பு: தேர்வு செய்யப்படும் மாணவர்கள் படிப்பு காலம் முழுவதும் அறிவிக்கப்பட்டபடி, உதவித்தொகை பெற, இளநிலை பட்டப்படிப்பு எனில் 2.50 ஜி.பி.ஏ.,க்கு அதிகமாகவும், முதுநிலை பட்டப்படிப்பு எனில் 3.25 ஜி.பி.ஏ.,க்கு அதிகமாகவும் மதிப்பெண்களை பெறுவது அவசியம். தவறும் பட்சத்தில் அந்த ஆண்டிற்குரிய உதவித்தொகை வழங்கப்பட மாட்டது.


விபரங்களுக்கு: https://soad.kmutt.ac.th/scholarship/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews