காட்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு, ருக்மணி. இவர்களது மகள் சௌந்தர்யா(17). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதிய இவர், தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாள்களில் மேட்டூர் தனுஷ், அரியலூர் கனிமொழி ஆகியோர் நீட் பயத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.