5ம் வகுப்பு தேர்வில் அரசு விளம்பரம்; சர்ச்சையில் சிக்கிய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 14, 2021

Comments:0

5ம் வகுப்பு தேர்வில் அரசு விளம்பரம்; சர்ச்சையில் சிக்கிய அரசு

சண்டிகர்-பஞ்சாபில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், அரசு திட்டமான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


அரசு விளம்பரம்


பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடும் தேசிய தகுதி தேர்வு அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சி தேர்வு நேற்று துவங்கியது. இதில் பஞ்சாபி மொழி தேர்வில் அரசு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டு, 'இந்த விளம்பரம் எதைப் பற்றி பேசுகிறது' என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அடுத்து, 'அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை எப்போது முதல் வினியோகிக்கப்பட உள்ளது' என்ற கேள்வி இடம் பெற்றது.ஐந்தாம் வகுப்பு தேர்வில் அரசு திட்டங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது, பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.


அனுமதி


ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் விக்ரம் தேவ் சிங் கூறுகையில், ''மாணவர்களின் தேர்வு வாயிலாக விளம்பரம் தேட முயற்சிக்கும் அரசின் நோக்கம் கண்டனத்துக்குரியது,'' என்றார்.அகாலிதள மூத்த தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான தல்ஜித் சிங் சீமா கூறியதாவது:கல்வியை கல்வியாகவே தொடர அனுமதியுங்கள்.இன்றைக்கு அரசு விளம்பரங்களை கேள்வித் தாளில் இடம்பெற செய்தவர்கள், நாளை அமைச்சர்களின் புகைப்படங்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்வர். இது முடிவே இல்லாமல் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews