நாடு முழுவதும் இன்று 3,862 மையங்களில் ‛நீட் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 12, 2021

Comments:0

நாடு முழுவதும் இன்று 3,862 மையங்களில் ‛நீட் தேர்வு

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுதும் 16 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படுகிறது. அதில், 16.14 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டு, 15.97 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 17 ஆயிரம் பேர் கூடுதலாக எழுத உள்ளனர். தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 ஆயிரம் மாணவியர் மற்றும், 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டில், 1.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.சென்னை, கோவை, கடலுார், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் நகரங்களில் மொத்தம், 224 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடை கட்டுப்பாடுஇந்த தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

தேர்வுக்கு வருவோர் 1:15 மணிக்குள், அவரவர் இருக்கையில் அமர வைக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்கு தேர்வர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்படும். 1:30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.முழு அங்கி, புர்கா போன்ற பாரம்பரிய உடையுடன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், பகல், 12:30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். முழு நீள கை உடைய ஆடைகளை அணியக்கூடாது. மாணவியரை, பெண் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்வர்.'ஹால் டிக்கெட், பாஸ்போர்ட்' அளவு புகைப்படம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, மாற்று திறனாளி சான்றிதழ், வெள்ளை நிற பின்னணியில் போஸ்ட் கார்ட் அளவு கலர் புகைப்படம் எடுத்து வர வேண்டும்.

தடை செய்யப்பட்டவை

புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள், 'கால்குலேட்டர், ப்ளூடூத், இயர்போன், மொபைல் போன்' போன்ற மின்னணு பொருட்கள், 'வாட்ச், பர்ஸ், பிரேஸ்லேட், மைக்ரோசிப், கேமரா' என எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு மையத்திலேயே பேனா வழங்கப்படும். இந்த முறை, கிருமி நாசினி மற்றும் முகக்கவசத்தை தேர்வு மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 மொழிகளில் தேர்வு!

ஆங்கிலம், ஹிந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே, எந்த மொழி என்று தேர்வு செய்கின்றனரோ, அந்த மொழியில் வினாத்தாள் இருக்கும். அதே மொழியிலோ, ஆங்கிலத்திலோ விடை எழுதலாம்.

'மல்டிபிள் சாய்ஸ்'

இந்த முறை வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து தலா, 50 கேள்விகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்திலும் இரண்டாவது பிரிவில் 15 வினாக்களில் 10 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதும்.முதல் பிரிவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடைக்கு, தலா, நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews