இளநிலை, முதுநிலை பொறியியல், முது நிலை அறிவியல் பயிலும் மாணவர் ஆராய்ச்சித் திட்ட உதவித் தொகை: விண்ணப்பிக்க செப்.24 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 16, 2021

Comments:0

இளநிலை, முதுநிலை பொறியியல், முது நிலை அறிவியல் பயிலும் மாணவர் ஆராய்ச்சித் திட்ட உதவித் தொகை: விண்ணப்பிக்க செப்.24 கடைசி

மாணவர் ஆராய்ச்சித் திட்ட உதவித் தொகை: விண்ணப்பிக்க செப்.24 கடைசி


சென்னை, செப். 15: இளநிலை, முதுநிலை பொறியியல், முது நிலை அறிவியல் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சித் திட்டங்க ளுக்கான உதவித் தொகை பெற செப்.24 -ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்த மன்றத்தின் உறுப்பினர் செயலர் இரா.சீனி வாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அறி வியல் தொழில்நுட்ப மாநில மன்றமானது, மாணவர்களிடம் இருக்கும் திறமையை நமது மாநிலத்துக்கு பயனளிக்கும் வகையில் மாணவர் ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந் தத் திட்டத்தின் கீழ் இளநிலை, முதுநிலை பொறியியல் மற்றும் முதுநிலை அறிவியல் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்துக்கும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வழங் கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் (www.tanscst.nic.in) கண்டுள்ள அறிவுரை களை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட முழு மையான விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகம், சென்னை-600025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்கள் மேற் கண்ட இணையதளத்தில் செப்.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை செப்.24-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.


கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 700 பேருக்கு ஆராய்ச்சித் திட்டத்துக்கான உதவித்தொகை வழங் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews