மைக்ரோசாப்ட் இன்டர்ன்ஷிப் -2021 - விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 29 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 26، 2021

Comments:0

மைக்ரோசாப்ட் இன்டர்ன்ஷிப் -2021 - விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 29

2022 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கு இடையில் பணியில் சேரும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் இந்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.


முக்கியத்துவம்அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், பியூச்சர்ஸ் கில்ஸ் பிரைம்- நாஸ்காம், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் திறன் முயற்சி திட்டம், எர்ன்ஸ்ட் & யங், கிட்ஹப் மற்றும் குவெஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் இந்த இன்டர்ன்ஷிப் வழங்கப்படுகிறது.


தொழில்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை பெற்றவர்களை உருவாக்கும் நோக்கில், ஒரு விர்ச்சுவல் இன்டர்ன்ஷிப் தளமாக ’பியூச்சர் ரெடி டேலன்ட்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், இது ’மைக்ரோசாப்ட் அஸூர்’ மற்றும் ’கிட்ஹப்’ உபகரணங்களை பயன்படுத்தி சவால்களுக்கு தீர்வு காணும் மற்றும் புதுமையான தீர்வுகளை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியாகும்.


பயன்கள்:மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸூர் மற்றும் கிட்ஹப் மாணவர் டெவலப்பர் பேக்கை பயன்படுத்தும் வசதி, தொழில் அமர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை இதன் மூலம் மாணவர்கள் பெறலாம். இன்டர்ன்ஷிப் எண்ணிக்கை: 50 ஆயிரம் யார் விண்ணப்பிக்கலாம்?:ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்டர்ன்ஷிப் வாய்ப்பை முழுமையாகப் பெறும் வகையில், 8 வார காலத்தை இதற்கு செலவிட தயாராக இருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த திறன்களையும், ஆர்வத்தையும் பெற்றவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:ஏ.ஐ.சி.டி.இ., - டி.யு.எல்.ஐ.பி., இன்டர்ன்ஷிப் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில், மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர், மாணவரது பெயர், ஐ.டி., வசிக்கும் நகரம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகிய தகவல்களுடன் பதிவு செய்ய வேண்டும். பிறகு, மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வர்டு பயன்படுத்தி, உள்நுழைந்து இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 29 விபரங்களுக்கு: https://internship.aicte-india.org/

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة