10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு செய்தல் சார்ந்து சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரின் கடிதம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 17, 2021

Comments:0

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு செய்தல் சார்ந்து சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரின் கடிதம்!!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு செய்தல் - அறிவுரைகள் - வழங்குவது தொடர்பாக
வேலைவாய்ப்பு பிரிவு


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 17.09.2021 அன்று மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளதக அறியப்படுகின்றது. எனவே, அவர்களது கல்வித் தகுதியை அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அணைத்து மண்டல இணை இயக்குதர்களும் (வேலைவாய்ப்பு) தங்கள் மண்டகத்திலுள்ள சார்நிலை அலுவலர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. பள்ளிகளுக்குரிய ID மற்றும் Passwont சென்ற ஆண்டுகளில் இப்பணிக்கென வழங்கப்பட்டதையே பயன்படுத்துமாறும் தெரியிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய கீழ்க்கண்ட விதிமுறைகளையே இவ்வாண்டும் பின்பற்றி இப்பணியினை செவ்வனே செய்து முடிக்க உரிய அறிவுரைகளை சார்நிலைல அலுவலர்களுக்கு வழங்க அனைத்து மண்டல. இணை இயக்குநர்களும் (வேலைவாய்ப்பு) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கு பரிந்துரைப் பணிகள் மேற்கொள்யது நிறுத்தி வைக்கப்படும்.


1. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பங்களிலேயே நேரலை வாயிலாக பதிவு செய்யப்பட வேண்டும்.


2. மின்தடை மற்றும் தொலைதொடர்பு துண்டிப்பு ஆகிய காரணங்களினால் பதிவுப்பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்து இப்பணியினை முடிக்க அனைத்து பள்ளிகளையும் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.


3. அனைத்து பதிவுதாரர்களுக்கும் சான்று வழங்கப்படும் நான் முதல் 15 நாட்கள் வரை ஒரே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். 4. பள்ளிகளில் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியில் உள்ள அச்சிடும் இயந்திரத்தின் யாயிலாக வேலைவாய்ப்பு அடையாள அட்டை (X10) பிரிண்ட் எடுத்து நா அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு அச்சிடப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை வழங்குவதில் அலட்சியமோ அலைக்கழிப்போ செய்யக்கூடாது.


5. ஏற்கனவே 10ம் வகுப்பு கல்வித்தகுதியினை பதிவு செய்தவர்களுக்கு பழைய பதிவு எண்ணிகேயே கூடுதல் தகுதியாக +2 கல்வித்தகுதியினை பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் +2 கல்வித் தகுதியினை புதியதாக பதிவு செய்யக் கூடாது. எனவே மாணவர்களை அவர்களது 10ம் வகுப்பு பதிவு செய்த வேலைவாய்ப்பு பதிவு அட்டையினை எடுத்து வருமாறு தெரிவிக்க வேண்டும். 10ம் வகுப்பு பதிவு செய்து பதிவு அட்டை இல்லாத நேரிவுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகி உரிய பதிவு எண்ணைப் பெற்று அதில் கூடுதல் பதிவாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த அறிவுரையினை எவ்வித விடுபாடுகளின்றி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.


6. மாணவர்களின் ஆதார் எண் மற்றும் கைபேசி எண்கள் பள்ளி கல்வித் துறையில் உட்செலுத்தப்படவில்லை. எனவே, மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண்களை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதனை பெற்று உட்செலுத்திட பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்


7. மாணவர்களின் குடும்ப அட்டை / ஆதார் அட்டை / பான் அட்டை / மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை / கடவுசீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கண்டிப்பாக முகவரிக்கான அடையாள அட்டையாக கருத வேண்டும்.


8. பள்ளிகளில் ள்ள அறிவிப்புப் பலகைகளில் வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in-னையும், வேலைவாய்ப்பகப் பதிவிற்கு ஆதார் எண் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்வதையும் விளம்பரப்படுத்த வேண்டும்.


9. மேற்கண்ட அறிவுரைகள் சார்நிலை அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 10. ஒவ்வொரு அலுவலகமும் தனித்தனியே இயக்ககத்திற்கு அறிக்கை மற்றும் மின்னஞ்சல் அனுப்புவதைத் தயிர்க்குமாறும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இக்குறிப்பாணையை பெற்றுக்கொண்டமைக்கு அளிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews