ஆவின் காலிப்பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

Comments:0

ஆவின் காலிப்பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

ஆவின் பால் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தகவல்:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டம் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த விலை குறைப்பால் வழக்கத்தை விட ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் பால் பொருட்களை வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணி இடங்களுக்கு, அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும். அங்கு தினமும் 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் ரூபாய் 25 கோடியில் 100 மெட்ரிக் டன் கால்நடை தீவன அறுபத்தி செய்யும் ஆலை தொடங்கப்படும்.
இதர நிறுவனங்களின் விலையோடு ஒப்பிட்டு, ஆவின் பால் பொருட்களின் விலை மாற்றப்படும் பாலகங்களில் விற்கும் பால் பொருட்களுக்கு ரசீது தரப்படும்.

பால் பவுடர், வெண்ணெய் மொத்த விற்பனை முறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.
ஒற்றைச் சாளர முறையில் ஆவின் முகவர் நியமிக்கப்படுவார்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.
அம்பத்தூரில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் பிரிவு, சேலம் அம்மாபாளையத்தில் பால் பவுடர் தயாரிக்கும் பிரிவு ரூ.51.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews