TNPSC அரசுப்பணி தேர்வுகளுக்கு தமிழ்வழி சான்று (PSTM) – போட்டியாளர்கள் அச்சம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 26, 2021

Comments:0

TNPSC அரசுப்பணி தேர்வுகளுக்கு தமிழ்வழி சான்று (PSTM) – போட்டியாளர்கள் அச்சம்!

தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள 20% இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களும் இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணி

பொதுவாக படித்த இளைஞர்கள் மத்தியில் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக பட்டப்படிப்பு மட்டுமே அரசுப்பணிக்கு போதுமானது அல்ல. அவர்கள் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவதும் முக்கியமானதாகும். இப்படிப்பட்ட கனவுகளோடு பயணிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அரசுப் பணி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த இளைஞர்களது கனவை நனவாக்கும் வகையில் அரசுப் பணிக்காக தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த இடஒதுக்கீடுகளின் பயனை பெற 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில வழிக்கல்வியில் 1 ஆம் வகுப்பு முதல் கல்லுாரி வரை படித்தவர்கள் மீண்டுமாக தொலைதுார கல்வி மூலம் தமிழ் வழியில் படித்து பட்டம் பெற்று இடஒதுக்கீடு சலுகைகளை பயன்படுத்தினார்கள். இதனால் தமிழ்வழியில் படித்தவர்களிடையே போட்டி அதிகமாகி பணி வாய்ப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வழி சான்றிதழால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், ‘தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் படித்து, 6 ஆம் வகுப்புக்கு மேல் தமிழ் வழியில் கற்றவர்கள் தமிழ் வழிக்கான சான்றிதழை பெற முடியாமலும், அரசின் இடஒதுக்கீடு சலுகைகளை பயன்படுத்த முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் புதிய விதிப்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் தமிழ் வழி இடஒதுக்கீடு சலுகை கொடுக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews