TNPSC GROUP I தேர்வர்கள் கவனத்திற்கு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 01، 2021

Comments:0

TNPSC GROUP I தேர்வர்கள் கவனத்திற்கு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு

தமிழ் வழியில் பயின்று, குரூப் 1 தோ்வு எழுதிய தோ்வா்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது..

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
எண்: 36 / 2021
நாள்: 30/07/2021
தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி - 1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 05.08.2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், 16.08.2021 முதல் 16.09.2021 வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்: 1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை

2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு

3. பட்டப் படிப்பு இது குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதனிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة