ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - விரைவில் TET தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 09, 2021

1 Comments

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - விரைவில் TET தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியர்கள் நியமனம் :
தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளமையால் முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரைந்த பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணகெடுத்து அதை எம்மிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் பொன்னையா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். கடந்த ஆண்டுகளில் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன் படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. Tet 2012 அதுக்கு முன்னாடி பதிவு பண்ணினவர்கள்முன்னாடி பதிவு செய்த இவர்களுக்கு பணி வழங்கிய பிறகு மற்றவர்களுக்கு வழங்குவது தான் நீதி.இப்ப பாஸ் பண்ணினா pass பண்ணமுடியாம இருக்கும் வயது முதிர்ந்தவர்கள் என்ன ?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews