CBSE 12ம் வகுப்பு RL மாணவர்களுக்கான முடிவுகள் வெளியீடு – அறிந்து கொள்ளும் முறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 04، 2021

Comments:0

CBSE 12ம் வகுப்பு RL மாணவர்களுக்கான முடிவுகள் வெளியீடு – அறிந்து கொள்ளும் முறை!

CBSE 12ம் வகுப்பு மாணவர்களில் முன்னதாக முடிவுகள் வெளியிடப்படாத 60,000 RL மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இறுதி மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தேர்வு முடிவுகள் வெளியீடு:
சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஜூலை 30 அன்று 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது. அதில், மொத்தம் 99.37 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 99.67 சதவீதம் பெண்கள் மற்றும், 99.13 சதவீதம் ஆண்களும் தேர்ச்சி பெற்றனர். புதிதாக தொடங்கியுள்ள 1060 பள்ளிகளின் தேர்வு முடிவுகள் அப்போது வெளியிடப்படவில்லை. ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களுக்காக மாணவர்களின் தேர்வு முடிவுகள் பொதுவான தேதியில் வெளிடப்படவில்லை என்றால் அவர்களுக்கு பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த முறை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி, நடப்பாண்டில் 60,000 மாணவர்களுக்கு முடிவுகள் வாரியம் அறிவித்த தேதியில் வெளியிடவில்லை. ஒரு வாரத்திற்குள் RL மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வி வாரியம் அறிவித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதியான நேற்று சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு RL மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை, cbseresults.nic.in அல்லது cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அறிந்து கொள்ளும் முறை:
CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். “Senior School Certificate Examination (Class XII) Results of R.L. CASES: LOT-1 2021″ என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ரோல் எண் மற்றும் பள்ளி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இப்பொழுது உங்கள் முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة