உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி - கல்லூரி மாணவர்கள், குடும்பத்தினருக்கான போட்டிகள் - பதிவு செய்ய கடைசி நாள் 12.08.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 01، 2021

Comments:0

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி - கல்லூரி மாணவர்கள், குடும்பத்தினருக்கான போட்டிகள் - பதிவு செய்ய கடைசி நாள் 12.08.21

இந்தப் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை இயற்கைதான் நமக்கு அமைத்துக்கொடுத்துள்ளது. மனிதன் சுவா சிப்பதற்கு தேவையான சுத்தமான ஆக்சிஜனை மரங்கள் நமக்கு தருகின்றன. நம் தாகம் தணிக்க, மழை நீர் தருகிறது. பூ, காய், கனி ஆகியவற்றை இயற்கை நமக்கு வழங்கி வருகிறது. மனிதனுக்கு அனைத்து வழிகளிலும் பயனளிக்கும் இயற்கையை மனிதன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கு போஸ்டர் (சுவரொட்டி) தயாரிக்கும் போட்டி, குடும்பத்தினருக்கான புகைப்பட போட்டியையும் நடத்துகிறது. பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி: பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் ஜூனியர் பிரிவில் 4 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ‘இயற்கையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்’ எனும் தலைப்பிலும், சீனியர் பிரிவில் 7 முதல் 9-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், ‘இயற்கை வாழ்க்கைப் பயணம்’ எனும் தலைப்பிலும் ஓவியங்களை வரைய வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு போஸ்டர் தயாரிக்கும் போட்டி: கல்லூரி மாணவர்கள், ‘விந்தைமிகு இயற்கை’ எனும் தலைப்பில் போஸ்டர்களை தயாரித்து அனுப்ப வேண்டும். குடும்பத்தினரோடு பங்கேற்கும் போட்டி: உலக இயற்கை பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடும் வகையில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மரத்தை நடும் புகைப்படம் ஒன்றை எடுத்து, 9940699402 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் நடும் மரத்தின் பெயர், மரத்தின் பயன்பாடு பற்றிய விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/event/110-isha.html என்ற லிங்கில் தங்களது படைப்புகளை வரும் 2021 ஆக. 12-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة