தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் அதே வேளையில் 'சைபர் கிரைம்' எனப்படும் இணைய தரவுகளைத் திருடும் குற்றவாளிகளும் அதிகரித்து விட்டனர்.
தற்போது இந்தியக் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பல இணையதளங்களை முடக்கி அதில் ஊடுருவி அதன் தரவுகளைத் திருடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஜூலை மாத கணக்கின் படி வாரம் 5,916 இணையத் தாக்குதல்கள் நடை பெற்று இருப்பதாக தகவலில் தெரியவந்திருக்கிறது.
மேலும் செக் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியா, இத்தாலி, இஸ்ரேல், ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் இந்த இணையத் தரவுத் திருடர்கள் மூலம் அதிகம் பாதிப்படைந்திருப்பதாகவும் சில தெற்காசிய நாடுகளும் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் பாலசுப்ரமணியன் , 'இந்தியாவில் இருக்கும் பள்ளிகள் , பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்துவதால் அதன் பாதுகாப்பு பெரிதாக பேணப்படுவதில்லை என்பதால் பெரிய மெனக்கெடல் இல்லாமல் கணக்குளை முடக்கி இணைய ஊடுருவிகள் தரவுகளைத் திருடுகிறார்கள். இது தொடராமல் இருக்க கல்வி நிறுவனங்கள் தங்களின் இணையத்தளங்களை கடினமான முறையில் பாதுகாப்பு வசதிகளைக் அதிகப்படுத்தினால் இது போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம் ' எனத் தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்தில் கல்வித்துறை தளங்களில் இணைய ஊடுருவிகள் நடத்திய தாக்குதல்கள் சமீப வாரமாக 142 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது கிழக்கு ஆசியாவில் 79 சதவீதம் .
இத்தனை தாக்குதல்கள் எப்படி சாத்தியப்படுகிறது என்கிற கேள்விக்கு 'கரோனாவிற்கு பின் பல மாணவர்கள் செல்போன்கள் மூலம் இணைய வாயிலாக கல்வி கற்று வருவதால் பல நேரங்களில் அந்தத்தளம் பெரிய பாதுகாப்புடன் இருப்பதில்லை என்பதால் இணைய ஊடுருவிகளால் சுலபமாக தாக்குதல் நடத்தப்படுகிறது ' என பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார்.
உலகில் அதிகமாக தரவுகள் திருடப்படும் துறையாக கல்வித்துறை இருப்பதாகவும் 94 சதவீதம் இணைய ஊடுருவிகள் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களையே அதிகம் தாக்குகிறார்கள் என்றும் செக் பாயிண்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، أغسطس 20، 2021
Comments:0
இந்தியக்கல்வி நிறுவனங்களின் தரவுகளத்ை திருடும் இணைய ஊடுருவிகள்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.