அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமணை - வேலைவாய்ப்பு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 01، 2021

Comments:0

அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமணை - வேலைவாய்ப்பு அறிவிப்பு

கோவிட்-19 பேரிடர் பெருந்தொற்று அறிவிப்பு காரணமாக மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கொரானா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக ஆறு மாத காலத்திற்கு கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட அரசு ஆணை பெறப்பட்டது. கீழே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கான, பணியாளர்கள் அப்பணிமிடங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை மற்றும் மாதாந்திர சம்பளத்திற்கு நுழைவு நேர்க்காணல் கீழ் அறிவித்துள்ள நாட்களில் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூலம் நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு தேர்வு, செய்யப்பட்டு, அப்பணிகள் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு பணிவரன்முறை நிரந்தரப்பணியிடமாக்கப்படவோ மாட்டாது என்பதை தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்பட்டபின் பணியாளர்கள் மீது ஏதேனும் ஒழுங்கீனம் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியாளர் பணியிலிருந்து உடனடியாக விலக்கப்படுவார் என்பதையும், இப்பணிகள் அரசு குறிப்பிட்டுள்ள ஆறுமாத காலத்திற்குள் பணிகளை ரத்து செய்வது குறித்து அரசு ஏதும் முடிவு மேற்கொள்ளப்பட்டால் அவ்வாறான அரசின் கொள்கை முடிவுகளை ஏற்கவேண்டும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளுக்கு உரிய கல்வித்தகுதி உடையவர்கள், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று, ஆதார் அட்டை அசல்கள் மற்றும் இவற்றின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்றும் அக்கடிதத்தில் மேற்கண்ட தற்காலிக பணியினை வழங்கக்கோரும் விண்ணப்பத்துடன் நேரில் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலக கட்டிடத்தினருகில் மேற்கண்ட நாட்களில் தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகுறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة