தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்துபொறியியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியது: நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி) விரைவில் திறக்கப்பட உள்ளது.இதற்கிடையே, சிறுபான்மையினர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளர்களை தேர்வு செய்வதில் நிகழும் மோசடிகளைத்தவிர்க்க, மத்திய அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, என்எஸ்பி தளத்தில் பதிவேற்றப்படும் போலி விண்ணப்பங்களை தடுக்கும் வகையில், மாணவர்களின் சுய விவரங்களை ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு, மின்னணு முறையில் சரிபார்க்கும் முறையை மத்திய சிறுபான்மையின நலஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையேல், நடப்பாண்டு தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க இயலாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் ஆதார்விவரங்களை துரிதமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 62 ஆயிரம் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews