திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாற்றுத்திறனாளிக் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப.,அவர்கள் தகவல்
தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கை. கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம். மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியரின் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்விச் சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதுவே முதல் திருமணம் என்பதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்) ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
மேற்காணும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் 0431-2412590 மூலம் தொடர்பு கொண்டு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் பெறும் திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.