தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயின்று வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி , ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 -ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை -5 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இததொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044- 28551462 தொலைபேசி எண்ணிலோ அல்லது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தையோ அலுவலக நாள்களில் நேரடியாக அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.