அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. செப்., 9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் படிக்க, கடந்த மாதம், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை நடந்தது. அதை தொடர்ந்து, கடந்த, 24ம் தேதி முதல், நேரடியாக விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை பணி நடக்கிறது. இந்த பணி செப்., 9ம் தேதி வரை நடக்கும்.
மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் எதுவும் இல்லை. மேலும், மாதாந்திர உதவித் தொகை, 750 ரூபாய், இலவச புத்தகம், மடிக்கணினி, வரைபட கருவிகள், சீருடை, காலனி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2625 2453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அதே போன்று, செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள அரசினர் ஆதி திராவிட நலத்துறை தொழிற்பயிற்சி நிலையத்திலும், பிட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட, தொழிற்பயிற்சி கல்விக்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேற்கண்ட தொழில் பிரிவுகளில், படிக்க விரும்புவோர், தற்போது நடக்கும், நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு, வடகரை ஐ.டி.ஐ., 044 - 2955 5659 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
بحث هذه المدونة الإلكترونية
السبت، أغسطس 28، 2021
Comments:0
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க செப்., 9 கடைசி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.