பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 23, 2021

Comments:0

பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06.
நக.எண்:01424/எம்/82/2019, நான்: 22.07.2021 பொருள்:

1. பள்ளிக்கல்வி- அகஸ்தியா பண்னாட்டு நிறுவணம் 2021-2022 ஆம் கல்வி ஆண்டு- புதியதாக 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab, 1 Mobile Lab, Lab on a Bike and YIL Programs தொடங்கிட அனுமதி வழங்குதல் தொடர்பாக,

2. பள்ளிக்கல்வி- அகஸ்தியா பண்னாட்டு நிறுவணம்2021-2022 ஆம் கல்வி ஆண்டு- கடந்த கல்வி ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு 12 மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்களை இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதி வழங்குதல்- தொடர்பாக

3. பள்ளிக்கல்வி- அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம்- 2021-22 ஆம் கல்வி ஆண்டு- அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வாரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் காணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்குதல் தொடர்பாக, பார்வை, தமிழ்நாடு, அகஸ்தியா பன்னாட்டு நிறுவணம், மண்டல மேலாளர்,
திரு. K Tour அவர்களின் கடிதம். நாள்18.08.2021,

பார்வையில் காணும் கடிதத்தின்படி, அகஸ்தியா பன்னாட்டு நிறுவணம் {Agaitya International Foundation) எனும் தொண்டு நிறுவனம் இந்தியாவின் 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில், பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்திட பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்போது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், விழுப்புறம், கம்ாக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், இராமநாதபுரம், விருதுநகர், தேனி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கரூர் ஆகிய 18 மாவட்டங்களில் புதியதாக, Science Centre | Mobile Science Lab உள்ளிட்டவற்றை செயல்படுத்திட அனுமதியும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, கிருஷ்னாகிரி, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கண்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மேற்கண்ட நிறுவணத்தாராஜ் ஏற்கனவே பள்ளிகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை, இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதி வேண்டியும், அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் (Whats App, Google Meet) செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு:எடுக்க அனுமதி கோரியும் பார்வையில் காணும் கடிதம் பெறப்பட்டுள்ளது. தற்போது, Covid-19 வைரஸ் தொற்றின் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், கொரோனா நோய் தொற்று சார்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மேற்கண்ட செயல்பாடுகளை சார்ந்த மாவட்டங்களில் செயல்படுத்திட, அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையிலும், மாணாக்கர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எவ்விதத்திலும் பாதித்தல் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டும், சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மேற்கண்ட நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை, (Science based Activities) அனைத்துப் பள்ளி மாணாக்கர்களும் பயன்பெறத் தக்க வகையில், தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும், அனுமதி ஆணை வழங்கப்படுகிறது.
இணைப்பு:-பார்வையில் காணும் கடிதம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews