அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000 மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 65000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கு கோரிக்கைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000 மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 65000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கு கோரிக்கைகள்!

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000 மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 65000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கு கோரிக்கைகள்!
மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி கல்வி துறை அமைச்சர் - தமிழ்நாடு

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000 மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 65000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் கோரிக்கைகள்

1.மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் 6 முதல் 10 வரை பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் இந்த பாடத்திட்டம் திட்டம் செயல்படாமல் போனது. தற்பொழுது புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் பெயரளவில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து தனி பாடமாக வருமாறு வரும் கல்வி ஆண்டு முதல் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டுகின்றோம்.

2. அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழும் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டுகின்றோம்.

3. கடந்த 11-ஆண்டுகளாக மேலாக புதிதாக தரம் உயர்த்தப்பட்டடுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. மேற்கண்ட பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவித்து. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்

4. கணினி இன்றியமையாத சூழலில் அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளி(1-5), நடுநிலைப் பள்ளி(6-8), உயர்நிலைப் பள்ளி(9-10), மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்(11-12) கணினி ஆய்வங்கள் தேற்றுவித்து குறைந்தது பள்ளிக்கு ஒரு கணினி அறிவியலில் பி.எட் படித்தவர்களை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டுகிறோம். 5. அரசுப் பள்ளிகளில் மாற்ற பாடப் பிரிவிற்கு பணியிடங்களை நிரப்புவதற்க்கு 10+2+3+1என்ற பணி விதியை பின்பற்றுவது போன்று உதாரணமாக தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் அவர்கள் படித்த பாடப் பிரிவிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுபோன்று கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பொழுது கணினி அறிவியலில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்து கணினி ஆசிரியர்களுக்கான 10+2+3+1 என்ற பணி விதியை உருவாக்கி தர வேண்டுகின்றோம்.

6.கணினி அறிவியலில் பி.எட்., படித்தர்களுக்கு TET, TRB, AEEO மற்றும் DEO தேர்வு எழுதுவதற்க்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. NCTE-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் TNTET, AEE0, DEO, TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே இந்த தேர்வுகளை எழுத வழி வகை செய்ய வேண்டுகின்றோம்.

7. தமிழகத்தில் பி.எட் பயின்றவர்கள் ஏறளமானேர் 40 வயதை கடந்து விட்டனர். ஆகவே 50:50 சதவிகிதம் சீனியார்டி மற்றும் தேர்வு முறையை பின்பற்ற வழிவகை செய்யுமாறு வேண்டுகின்றோம்
தமிழகத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் காகிதமில்லா பட்ஜெட்டை அறிமுகம் செய்து இந்தியளவில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் 6 முதல் 10 வகுப்பு வரை பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்ற காரணத்தினால் இந்த பாடத்திட்டம் செயல்படுத்தாமல் முடக்கப்பட்டது . அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் கழிவுகளாக கருதப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன.

தற்பொழுது புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் பெயரளவில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10 வகுப்பு வரை தனி பாடமாக வழங்கி தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை உருவாக்கி 65000 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம்.

ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் வீதம் நியமனம் செய்து அரசுப் பள்ளியின் தரத்தை காக்க ஆவன செய்ய வேண்டுகின்றோம்.
இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்களும் கணினிக் கல்வியை மேம்படுத்த செய்யலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews