மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 29, 2021

2 Comments

மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி (டி.ஏ.,) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு முன் 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதல் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2 comments:

  1. Very good news.all ex serviceman blessing

    ReplyDelete
  2. நடுவண் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலை மகிழ்ச்சி.ஆனால் தமிழ். நாடு போன்ற மாநில ஊழியர்களுக்கு ஏப்ரல் 2022ல் கூட வழங்கப்படுமா?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews