கொரோனா காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டு வெளியிடுவது சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது.
அதன்படி, கடந்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி முதல் விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பப்பதிவு வந்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகவும் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று வரையிலான தகவல்படி, சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்பதிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுமா? என்பதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. கடந்த ஆண்டும் கிட்டதட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பப்பதிவு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.