மகளிர் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 20، 2021

Comments:0

மகளிர் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பட்டய பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்,' என, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.கோவை ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அறிக்கை: கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2021 -22ம் ஆண்டுக்கான பட்டய பயிற்சி சேர்க்கைக்கு, https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். பிளஸ் 2வில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.சி., பிரிவினருக்கு பிளஸ் 2வில், 50 சதவீதம் மதிப்பெண்கள்; எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு, 45 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.பி.சி., எம்.பி.சி., 30 வயதுக்குள்; எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்குள்; ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வி கட்டணமாக, முதலாமாண்டு, ஐந்தாயிரம் ரூபாய்; இரண்டாமாண்டு, 1,500 ரூபாயாகும். அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.வரும், 27ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.தொலைபேசி எண், 0422 2399315 மற்றும் மொபைல் எண், 73730 03375 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة