தமிழகத்தில் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு போட்டி:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித்துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அரசின் முயற்சியால் நடப்பு ஆண்டு மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மாணவர்களின் கற்றல் நிலை கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திட்டப்படவுள்ளதால் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும். மேலும் மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு நிலைகளில் சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசால் 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று சட்டப்பேரவையில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இதற்கான கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.