தமிழக பட்ஜெட் 2021-22: - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 13، 2021

Comments:0

தமிழக பட்ஜெட் 2021-22: - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

தமிழக பட்ஜெட் 2021-22:  - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் :

அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்த நிதி 48 ஒதுக்கீடு.

பெண் அரசு ஊழியர் மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

மலைப் பகுதியில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்.22 பள்ளிகள் தரம் உயார்த்தப்படும்

தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும்

அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படும்

உயர்கல்வி துறைக்கு 5,369.09 கோடி ஒதுக்கீடு

புதிதாக 10 கலை,  அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்

கல்வித்துறைக்கு ரூ,32,599.54/- கோடி நிதி ஒதுக்கீடு.

865 உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை 

மாணவர்களுக்கு டேப் ( தொடுதிரை கணினி)  வழங்கப்படும்.

தமிழக காவல் துறையில் 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும்.

திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்


தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

12:09 Aug 13

 மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை.

தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் அறைகலன் பூங்கா அமைக்கப்படும்.

12:08 Aug 13 

தமிழகத்தில் 5 இடங்களில் டைடல் பூங்காங்கள்

 தமிழகத்தில் 5 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் விழுப்புரம், திருச்சிற்றம்பலம், வேலூர்,  திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.

சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

11:52 Aug 13 


புதிதாக 1000 பேருந்துகள்

 தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 2ஆம் கட்டப் பணிகள் 2026க்குள் நிறைவு பெறும்.


தமிழகத்தில்தான் அதிக அளவிலான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.


17,899.17  கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.


11:52 Aug 13 


பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு

 பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும். 

2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக ஐஇருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது. 

கற்றல் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை 

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மேம்படுத்துதல், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தரவுகளை கண்காணிக்க, 433 கல்வி ஒன்றியங்களுக்கு ஆசிரியர்களுக்கு 40 டேப்லட் வழங்கப்படும்.  

8 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை பெற உறுதி செய்யும்பொருட்டு 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' கொண்டு வரப்படும். 

ரூ. 20 கோடி ரூபாயில் 865 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றார். 


11:51 Aug 13 


தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல: பழனிவேல் தியாகராஜன்

 கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று  தவறானது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று அறிவித்தார்.


11:50 Aug 13 


நகர்ப்புற மேம்பாடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள்

 

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு 17,899.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குடிசை மாற்று திட்டத்திற்கு 3954 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வீட்டு வசதித்துறையில் உலக வங்கி திட்டத்திற்கு 320.40 கோடி.

வீட்டு வசதித்துறையில் ஆசிய வங்கி திட்டத்திற்கு 171 கோடி.

புதிய பேருந்துகள் வாங்க 623.59 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் மின் கம்பங்கள் அமைக்கப்படும்.

நகராட்சிகளின் மண் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.

11:21 Aug 13 

சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய திட்டங்கள்

 சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதன்படி, சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.

சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11:20 Aug 13 

சுவரொட்டிகள் இல்லாத சென்னை

சென்னை மாநகரத்தில், பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.

11:18 Aug 13 

சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்

 சட்டமன்ற உறுப்பினர் தொகுதிநிதி ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.

 ரூ.100 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும்.

 சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

11:06 Aug 13

 நீர்நிலை புனரமைப்புக்கு ரூ.610 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும். 

மொத்தமாக பாசனத் திட்டத்திற்காக  ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும். 

நீர் நிலைகளைக் கண்டறியவும் அதைப் பாதுகாக்கவும் ஜிபிஎஸ் முறைகளும், ட்ரோன்களும் உபயோகித்து நெறிமுறைப்படுத்தப்படும். 

மேட்டூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை பழையநிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

11:02 Aug 13 

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள்

 தமிழக அரசு ரூ.8,017.41 கோடி செலவில் வீடு இல்லாதவர்களுக்கு 2,49,877 வீடுகள் கட்டித் தரப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

 79,395 மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வகை செய்யப்படும்.

 தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

 தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்.

10:58 Aug 13

 200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

10:50 Aug 13

தமிழக காவல்துறையில் 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

10:49 Aug 13

200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

 

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

 

சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

10:45 Aug 13

 தமிழ்நாட்டின் நிதிநிலை மூன்றாண்டுகளில் சரி செய்யப்படும். 

புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும். 


1921ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்றம் நிகழ்வுகள் கணினிமயமாக்கப்படும். 

10:44 Aug 13 

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகம்

 பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

10:39 Aug 13

 தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

10:39 Aug 13 

தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு: பட்ஜட்

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டில், ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 

மேலும், கீழடி, கொற்கை உள்ளிட்ட  தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட  தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

10:30 Aug 13 

கருணாநிதி செம்மொழி விருது

பொது நிலங்களை முறையாகப் பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

 

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.

 

ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

 

10:27 Aug 13

 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மொத்தம் பெறப்பட்ட மனுக்களில், இதுவரை 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

10:19 Aug 13

 

இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜட் உரையை தொடங்கினார் பழனிவேல் தியாகராஜன்.

 

தொடர்ந்து அவர் பேசுகையில், நிதியாண்டின் எஞ்சிய 6 மாத காலத்துக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை பொருந்தும்.

 

எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல் படி அதனை அடையாளம் கண்டு அதன் ஆழத்தை புரிந்து கொள்வதுதான் .

 

முதல்வர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம்.

 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பதவியேற்றதுமே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றம் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

 

10:06 Aug 13 பட்ஜெட் தாக்கல்

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


10:05 Aug 13

 தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாகவும் கணினி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கையடக்கக் கணினியும் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, வாசிக்க அதிலுள்ள வரிகள் அனைத்தும் கணினியில் தெரியும். மேலும், நிதிநிலை அறிக்கையை புத்தக வடிவில் கையடக்கக் கணினியில் பாா்க்க முடியும். இதற்காக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10:04 Aug 13

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

 

10:02 Aug 13

 முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

10:02 Aug 13 முதல்வர் வருகை

கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة