கிணத்துக்கடவு, ஆக. 21-
கிணத்துக்கடவு, வடபுதுாரில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் சார்பில், விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தலைமை வகித்தார். வேளாண்உதவி இயக்குனர் மீனாம்பிகா, துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஓய்வு பெற்ற துணை வேளாண் இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல் பேசுகையில், ''விதைப்புக்கு முன், மண்மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிப்பது அவசியம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் கையாண்டு, பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
கோடை உழவு, உயிர் உரம், விதை நேர்த்தி, மஞ்சள் வண்ணப்பொறி, இனக்கவர்ச்சி பொறிகளை கொண்டு, பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பயிர்களில் இருக்கும் நன்மை பயக்கும் பூச்சிகளை பாதுகாப்பது அவசியம்,'' என்றார்.கால்நடை உதவி மருத்துவர் பரமேஸ்வரன் பங்கேற்று, கால்நடை பராமரிப்பு, சினைப்பிடித்தல் முதல் கன்று ஈனும் வரை செயல்படுத்த வேண்டிய நடைமுறை, கால்நடைகளை தாக்கும் நோய்கள், கால்நடை காப்பீட்டு திட்டமும் அதன் பலன்களும், பால் உற்பத்தி அதிகரிக்க, கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டிய தீவனமுறைகள் குறித்து தெரிவித்தார்.தொடர்ந்து, கன்று பராமரிப்பு, தடுப்பூசி செலுத்துவதன் அவசியம், சினை ஊசி போடும் பருவங்கள் குறித்து, விளக்கமளித்தார்.வேளாண் அலுவலர் மகேஸ்வரன், நுண்ணீர் பாசனத் திட்டங்கள், திட்டத்தில் உள்ள மானிய விபரங்கள் பற்றி தெரிவித்தார்.
بحث هذه المدونة الإلكترونية
السبت، أغسطس 21، 2021
Comments:0
நீர்வடி மேலாண்மை திட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டு பயிற்சி: செப்.,15 வரை விண்ணப்பிக்கலாம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.