ஜாக்டோ - ஜியோவின் 14 கோரிக்கைகள் - நிறைவேற்றுமா தமிழக அரசு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

ஜாக்டோ - ஜியோவின் 14 கோரிக்கைகள் - நிறைவேற்றுமா தமிழக அரசு?

தமிழகத்தில் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பானது ஜாக்டோ - ஜியோ 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு , கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான கோரிக்கைகளுக்காக , முந்தைய ஆட்சியாளர்களின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு , தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது . கடந்த ஜாக்டோ - ஜியோவின் அனைத்து போராட்ட - இயக்க நடவடிக்கைகளுக்கும் ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது . தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் கொரோனா நோய்த் தொற்று ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு , படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற உளமார்ந்த நம்பிக்கையோடு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை அளிக்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews