தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு:
தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 07 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்வு எழுத உள்ளர்வர்கள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘வெப் கேமரா’ வாயிலாக புகைப்படம் எடுத்து கல்வி நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல், இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100, ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.50 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.