அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஓபிஎஸ் - இபிஎஸ் அறிக்கை - தேதி: 10.08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 10، 2021

1 Comments

அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஓபிஎஸ் - இபிஎஸ் அறிக்கை - தேதி: 10.08.2021

முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்: இபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை!

அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்துஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கைவெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு கழகத்தவர்களைபழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன. துடிப்பான கழகச் செயல்வீரர் எஸ்.பி. வேலுமணி மீது தொடர்ந்த அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறோம். கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாக அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது . இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும் அன்பு வழியிலும், அறவழியிலும் அரசியல் தொண்டாற்றும் என்று குறிப்பிட்டுள்ளது.

هناك تعليق واحد:

  1. உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة