ஆசிரியர்கள் 100% தடுப்பூசி செலுத்தினார்களா என உறுதிப்படுத்தும் பணியில் கல்வித்துறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 21، 2021

Comments:0

ஆசிரியர்கள் 100% தடுப்பூசி செலுத்தினார்களா என உறுதிப்படுத்தும் பணியில் கல்வித்துறை!!

பள்ளிகள் செப்., மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், மாவட்டத்தில் ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யும் பணிகளை துவக்கியுள்ளது கல்வித்துறை.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயத்த பணிகள் பள்ளிகள் நடந்து வருகின்றன.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளபோது, பள்ளிகள் திறக்கப்படுவதால், ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை, உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் வாரியாக எண்ணிக்கை, போடாதபட்சம், அதற்கான மருத்துவ காரணங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة