10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணையில் வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு தள்ளுபடி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வரும் நிலையில் நோய் தோற்று பரவும் விகிதம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரப்பட்டது. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய கல்வி வாரியங்களும் தேர்வினை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பிற்காக வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணங்களை திருப்பி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேர்வு கட்டணத்தை திருப்பி தருதல் தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணை முடிவில்10,12ம் வகுப்பு தேர்வுக்கான தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனு அளிக்கப்பட்டதில் எந்த பொதுநலமும் இல்லை என்பதாலும் தேர்வுகளுக்குகான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னர் தான் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதனால் அதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசுகள் கண்டிப்பாக மேற்கொண்டு இருக்கும் எனவே தேர்வுக்கான தொகையை திருப்பி வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என்பதாலும் இந்த வழக்கு நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.