WhatsApp ல் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

WhatsApp ல் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

அதிக பயனர்களை கொண்ட முன்னணி தகவல் தொடர்ப்பு சாதனமான WhatsApp செயலியில் அனைவராலும் விரும்பப்படும் அம்சமாக ஸ்டேட்டஸ் அம்சம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவிடப்படும் தரவுகளை நாம் மொபைல்களில் எளிதாக சேமித்து கொள்ள முடியும்.

WhatsApp ஸ்டேட்டஸ்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகதளங்களில் ஸ்டேட்டஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்டோரி பக்கம் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த அம்சங்கள் மூலமாக பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், பதிவுகள், வீடியோக்களை தனக்கு நெருங்கியவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும். வாட்ஸ் அப்பின் இந்த ஸ்டேட்டஸ் அம்சம் சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இத்தகைய ஸ்டேட்டஸ் தரவுகளை அதிகமான WhatsApp பயனர்கள் உபயோகம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும், இந்த ஸ்டேட்டஸ் அம்சத்தைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான புகைப்படங்களும், வீடியோக்களும் வாட்ஸ் அப்பில் பதிவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கிறது. இந்த வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ் அம்சத்தின் தனித்துவம் என்னவென்றால், நாம் பதிவிடும் எந்தவொரு தகவலும் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். இதனிடையே WhatsApp பயனர்கள் தங்களுக்கு விரும்பிய, மற்ற பயனரது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. இந்த செயல்பாடுகளை WhatsApp தடை செய்துள்ளது.

இவ்வாறு ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவிட்ட ஸ்டேட்டஸ்களை பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழிமுறைகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து உங்கள் தொலைபேசியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எங்கு சேமிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக முதலில் Status போல்டரை திறக்கவும்.

பிறகு file managerல் உள்ள மெனு பாரை திறக்கவும்.

அதில் Settings என்பதை தேர்வு செய்யவும்.

பிறகு கொடுக்கப்பட்டுள்ள Unhide Files என்பதை கிளிக் செய்யவும்.

file manager ல் WhatsApp என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Status போல்டர் என்பதில், Media போல்டரை தேர்ந்தெடுக்கவும்.

அனைத்து வாட்ஸ் அப் புகைப்படங்களும் வீடியோக்களும் இங்கே தெரியும்.

இதில் தேவையான புகைப்படம் மற்றும் வீடியோவையும் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

இது தவிர Google Play Store லிருந்து சில செயலிகளை பதிவிறக்கம் செய்து, ஸ்டேட்டஸ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews