WhatsApp QR Code மூலம் இத்தனை வசதிகளா? முழு விபரம் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

WhatsApp QR Code மூலம் இத்தனை வசதிகளா? முழு விபரம் இதோ!

WhatsApp QR Code மூலம் இத்தனை வசதிகளா? முழு விபரம் இதோ!

வாட்ஸ்அப் மூலம் நமது மொபைலில் செய்யும் பல விஷயங்கள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மேலும் பல வசதிகள் பற்றி நாம் இன்னும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

வாட்ஸ்அப் செயலி:
வாட்ஸ்அப் செயலி பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் இந்த செயலியின் வாடிக்கையாளர்களுக்கு பல விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்-ல் உள்ள க்யூஆர் குறியீடு (QR Code) அம்சத்தின் மூலமாக பல அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நமது மொபைலில் குறிப்பிட்ட மொபைல் நம்பரை பெறாமலே அவர்களை காண்டாக்ட்ல் சேர்க்க முடியும். நமது க்யூஆர் குறியீட்டை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்து கொள்ளலாம். ஆனால் க்யூஆர் குறியீடு Reset செய்த பின்னர் நாம் முன்னதாக பெற்ற இணைப்பு அழைப்புகளை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் QR Code-ஐ ரீசெட் செய்யும் முறை: முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் ஐ திறக்க வேண்டும்.

அதில் மேல் பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.

தற்போது Settings ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் QR கோட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது திரையின் மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். தற்போது Reset QR code என்ற பிரிவில், Keep மற்றும் Reset என்ற விருப்பங்களில் Reset என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது உங்கள் QR Code Reset செய்யப்பட்டு புதிய QR CODE கிடைக்கும்.

வாட்ஸ்அப் QR Code கண்டுபிடிக்கும் முறை: முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் ஐ திறக்க வேண்டும்.

அதில் மேல் பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.

தற்போது Settings ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் QR கோட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது திரையில் தெரிவது தான் உங்கள் QR code ஆகும்.

வாட்ஸ்அப் QR code ஐ யாராவது ஸ்கேன் செய்தால் நடப்பது:

நமது வாட்ஸ்அப் QR code ஐ யாராவது ஸ்கேன் செய்தால் அவர்களால் உங்களை அவரின் வாட்ஸ்அப்பில் ஒரு காண்டாக்ட் ஆக உங்களை சேர்க்க முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews