WhatsApp செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – குரூப் கால் அப்டேட் - இன்று (ஜூலை 20) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 20، 2021

Comments:0

WhatsApp செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – குரூப் கால் அப்டேட் - இன்று (ஜூலை 20) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

உலகின் சிறந்த தகவல் தொடர்பு நிறுவனமான வாட்ஸ் அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு குரூப் கால் வசதியில் சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இன்று (ஜூலை 20) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

வாட்ஸ் அப் அப்டேட்:

சிறந்த தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் அப் செயலி இன்றியமையாத சாதனமாகி விட்டது. இந்த செயலி மூலம் உலகின் எந்தவொரு மூலையில் உள்ள ஒருவருக்கு கால் செய்யவோ, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதனிடையே வாட்ஸ் அப் செயலி பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இதில் உள்ள ஸ்டேட்டஸ் அம்சம் பலரது விருப்பமாக இன்றளவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ் அப் செயலி ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் பயனர்கள் இனி ஆடியோ மற்றும் வீடியோ குரூப் கால்களில் 5 பேர் வரை தொடர்பு கொள்ள முடியும். இதனுடன் உங்கள் தொடர்பில் இருப்பவர்கள் யாரென்றும் உங்களால் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது குரூப் கால்களில் தவறவிட்டவர்களை முதலில் அழைக்க வேண்டும். இந்த சேவைகளை பொறுத்தவரை, பயனர் அழைத்த நபர் இணையத்தில் இல்லாத சமயத்தில் அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த அழைப்புகளை தவர விட நேரிடும்.

அதனால் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம், குரூப் அழைப்புகளை தவர விட்டவர்கள் தாங்கள் விரும்பும் நேரங்களில் அழைப்புகளில் இணைந்து கொள்ளலாம். மேலும் வீடியோ அழைப்புகளில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டுமாக அழைப்பில் இணைந்து கொள்ளலாம். இந்த புதிய அம்சமானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பில் பயனர்களுக்கும் இவ்வகை வசதிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள பயனர்கள் முதலில் Tap to join என்று கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதும், வீடியோ அழைப்புகளை தவிர்க்க Ignore ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பெர்க், ‘வாட்ஸ் அப் செயலியில் குரூப் அழைப்பு அம்சங்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இப்பொழுது வாட்ஸ் அப் பயனர்கள் தவர விட்ட குரூப் அழைப்புகளில் மீண்டும் சேர்ந்து கொள்ளவும், விலகவும் முடியும்’ என தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة