TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் ரத்து குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 08، 2021

1 Comments

TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் ரத்து குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் TNPSC பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றம் உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்றது. துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக 3,752 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளில் மாற்றம் வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்து பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை ரத்து செய்வது குறித்த வழக்கில் TNPSC பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

هناك تعليق واحد:

  1. வழக்கு தள்ளிவைப்பு தங்களுக்கு உத்தரவா????

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة