TET, TRB - ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த தயாராகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 12، 2021

4 Comments

TET, TRB - ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த தயாராகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்.

டெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்.

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த தயாராகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்.

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் அந்த தேர்வுகளை மீண்டும் நடத்த ஆசியர் தேர்வு வாரியம் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகவில்லை. அதைப்போல பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் TET தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும் கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் SET தேர்வும் நடத்தப்படாமல் பல இடங்களில் உதவிப்பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுள்ளது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட மற்றும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக அரசு கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.

வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வு பணிகளுக்காக பயிற்சி மையங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு ட்யூஷன் நடத்தாத பேராசிரியர்களின் பட்டியலை பாட வாரியாக அனுப்ப கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு, TRB உறுப்பினர் செயலர் சேதுராம வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

هناك 4 تعليقات:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة