SBI வங்கியின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வட்டி சான்றிதழ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 07، 2021

Comments:0

SBI வங்கியின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வட்டி சான்றிதழ்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI தனது வாடிக்கையளர்களின் வீட்டுக் கடனில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. அதாவது இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடன் வட்டிக்கான சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டுக்கடன்

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் SBI வங்கி அதன் வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. அதில் வயது முதிர்ந்தவர்களுக்கென வீடுகளில் வந்து சில சேவைகளையும், மருத்துவ வசதி, வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றில் குறைந்த அளவு வட்டியையும் வழங்குகிறது. அந்த வரிசையில் தற்போது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன் வட்டிக்கான சான்றிதழை அவரவர் வீடுகளில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வட்டி சான்றிதழை வீடுகளில் இருந்தபடியே சில எளிய வழிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுவாக SBI வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் வருமானவரியின் கீழ் வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், அந்த கடனுக்கான வட்டியில் தள்ளுபடியை கோருவதற்கு இந்த சான்றிதழ் கட்டாயமாகும். வழக்கமாக இந்த சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளை தேடி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது கொரோனா காலங்களில் வங்கிகளுக்கு சென்று இத்தகைய சேவைகளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதாக இல்லாததால், நீங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக

முதலில் https://www.onlinesbi.com/ இணையதளத்துக்குள் செல்லவும்.

அதில் உங்கள் வங்கியை தேர்வு செய்து அதில் லாகின் செய்து கொள்ளவும்.

பிறகு Home Loan Int.Cert (Prov) என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

தொடர்ந்து எந்த கணக்கிற்கு வீட்டுக்கடன் வட்டி சான்றிதழ் வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி சான்றிதழ் திரையில் தோன்றும்.

இவற்றை நீங்கள் PDF படிவமாக பதிவு செய்துகொள்ளலாம்.

இது தவிர SBI வாடிக்கையாளர்கள் Quick மூலமாகவும் இவ்வகை சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة