பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அதன் படி SBI வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளுக்காக பயன்படுத்தும் OTP யில் நடைபெற்று வரும் மோசடிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி மோசடிகள்:
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், SBI வங்கியின் வாடிக்கையாளர்கள், OTP பரிமாற்றத்தின் போது சீனாவை சேர்ந்த மோசடி கும்பலால் ஏமாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரூ.50 லட்சம் மதிப்புள்ள இலவச பரிசுகளை பெறுவதற்காக, வங்கியின் KYC எண்ணை குறிப்பிடப்பட்டுள்ள லிங்க் மூலம் மாற்ற வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். இந்த மோசடிகள் பெரும்பாலும் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் தகவல்களில் ஏற்படுவதாக புது டெல்லியை சேர்ந்த சைபர்பீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வகையான மெசேஜ்களில் முதலாவது வங்கியின் KYC எண் வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு பின்னர் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கிறது. பிறகு பயனர்கள், லாகின் செய்து தொடரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆப்ஷனை தேர்வு செய்கையில், அவை KYC தகவல்களை கொண்ட பக்கம் திறக்கும். அதில் USERNAME, கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டு ஆன்லைன் பேங்கிங் செய்யும் முறை திறக்கும். பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். பிறகு அந்த OTP எண்ணை பதிவு செய்தவுடன் மற்றொரு பக்கம் திறக்கும். அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர் பெயர், பிறந்த தேதி, மொபைல் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும். பிறகு மீண்டும் OTP க்கான ஒரு பக்கம் திறக்கப்படுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல வாட்ஸ் அப் வழியாக, வாடிக்கையாளர்களின் கண்களை கவரும் விதத்தில் சில சலுகைகள், பரிசுகள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் பகிரப்படுகிறது. மேலும் முகப்புத்தகத்தில் உள்ள கமெண்ட் செக்சனில் அந்த பரிசுகள் குறித்த விளக்கங்களை பயனர்கள் பகிர்கின்றனர். அதனால் மோசடிகளை தவிர்க்க சமூக வலைதளங்களில் பகிரப்படும் இவ்வகையான மெசேஜ்களை செயல்படுத்த வேண்டாம் என SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.