தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்:- அருன் சிங் ( National General secretary) அறிவிப்பு) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 08, 2021

Comments:0

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்:- அருன் சிங் ( National General secretary) அறிவிப்பு)

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்:- அருன் சிங் ( National General secretary) அறிவிப்பு)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதால் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய பாஜக துணை தலைவருமான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார் இதே காலக்கட்டத்தில் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

தமிழக பாஜக தலைவர்களில் விருப்ப ஓய்வு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பிரபலமான நபர்களில் ஒருவராக அண்ணாமலை விளங்குகிறார் இந்நிலையில் சமீப காலமாக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராகலாம் என்கிற தகவல் கசிந்தது. நேற்று அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பாஜக தமிழக தலைவர் மாற்றப்படலாம் என்கிற தகவலும் அண்ணாமலை தலைவராக்கப்படுவார் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியானது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இளம் வயதுள்ள தலைவர் ஒருவர் பாஜகவுக்கு தலைவராக வந்துள்ளதால் தொண்டர்களிடையே எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

கரூர் மாவட்டம் ண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்கு சென்ற அவர் அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப்பார்த்து ஐபிஎஸ் படித்து சேவை செய்ய வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சிப்பெற்று கர்நாடக மாநில கேடரானார். அங்கு பயிற்சி எஸ்பியாக பணியைத் தொடங்கிய அவர் தனது பணிக்காலத்தில் கர்நாடகம் தாண்டி தமிழகத்திலும் பிரபலமானார். சீனியர் எஸ்பியாக பதவியில் இருந்தபோது 2019 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகினார் பின்னர் சிறிதுகாலம் ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்த அவர் ரஜினி கட்சியில் இணைவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி கட்சியின் முடிவை கைவிட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த ஓராண்டிற்குள் அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews